"அமைச்சருக்கு ரூ.10 கோடி; ஆம் ஆத்மிக்கு 60 கோடி" - சுகேஷ் வெளியிட்ட 'பகீர்' தகவல்.. டெல்லி அரசியலில் பரபரப்பு

x

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் தன்னிடம் 10 கோடி ரூபாயை பறித்துக்கொண்டதாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வைத்திருக்கும் குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

டிடிவி தினகரன் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கிதருவதாக மோசடி செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், அங்கிருந்து டெல்லி தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாயை பறித்த வழக்கில் சிறையில் உள்ளார். இப்போது அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் தனக்கான பாதுகாப்பை உறுதி செய்வதாக ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 10 கோடி ரூபாயை பறித்துக்கொண்டார் என டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுகேஷ் ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. இதற்கு பதிலளித்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், மோர்பி சம்பவத்தை திசைத்திருப்ப பாஜக சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக போலியான செய்தியை பரப்புகிறது என குற்றச்சாட்டை நிராகரித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்