உலகமே உற்று நோக்கிய சிறுவன் கனவு... "ரொனால்டோவை பார்த்தே ஆகணும்.." - பலித்ததா...?காண்போரை கலங்கடிக்கும் நெகிழ்ச்சி சம்பவம்

x

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவை சந்திக்க விரும்பிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த சிறுவனின் ஆசை நிறைவேறியது...

பல்லாயிரக்கணக்கனா உயிர்களை பலி கொண்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு சவுதி குழு மீட்புப் பணிக்காக சென்றிருந்தது... அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் சிறுவன் நபில் சயீத், சவுதியின் அல் நசர் க்ளப்பிற்காக ஆடும் கால்பந்து வீரர் ரொனால்டோவை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்... சவுதி பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்கி அல் ஷேக், நபிலைத் தேடும் முயற்சியில், தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்... லட்டாகியாவில் உள்ள மஸ்பா அல் ஷாப் பகுதியில் தனது தாயுடன் வசித்து வரும் நபில் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சவுதியின் தலைநகரான ரியாத்திற்கு வரவழைக்கப்பட்டார்... விழிகள் முழுவதும் பிரம்மிப்புடன் சிறுவன் நபில் தன் தாயுடன் சவுதிக்கு வந்திறங்கியது அனைவர் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டது...


Next Story

மேலும் செய்திகள்