குறுக்கே வந்த நாய்; நிலைதடுமாறிய நபர்... நொடிப்பொழுதில் இரும்புக் கம்பத்தில் மோதி நொறுங்கிய லாரி ... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x

ஆவடி அருகே லாரி ஒன்று இரும்பு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில், ஆவடியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால், அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறியுள்ளார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுநர், லாரியை திருப்பியதில் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், காயங்களுடன் உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்