போலீசுக்கு தண்ணி காட்டும் ஆர்.கே.சுரேஷ்..திடீரென பகிர்ந்த புகைப்படத்தால் பரபரப்பு

x

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், ஆர்.கே.சுரேஷ்க்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்நிலையில், திருச்சியை மையமாக கொண்டு செயல்படும் எல்ப்பின் நிதி நிறுவன மோசடியிலும், ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவரை பிடிப்பதற்கான வேலைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, தனது ட்விட்டர் பக்கத்தில் நாகப்பாம்பு புகைப்படத்தை ஆர்.கே.சுரேஷ் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பதிவிட்ட 10 நிமிடத்திலே அந்த பதிவை அழித்திருக்கிறார். இந்நிலையில், ஆர்.கே. சுரேஷ் எந்த இடத்தில் இருந்து ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தினார் என்றும், அதன் ஐபி முகவரி மற்றும் செல்போன் சிக்னல் மூலம் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்