நூலிழையில் உயிர் தப்பிய ரிஷப் பண்ட் - விபத்திற்கான காரணம் இது தான் - வெளியான முக்கிய தகவல்

x

சாலையில் திபு திபுவென எரியும் இதுதான் ரிஷப் பண்ட் பயன்படுத்திய Mercedes SUV.

பெட்ரோல் எஞ்சின் காரான Mercedes SUV, மிகவும் சக்தி வாய்ந்தது. 5.7 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை இதனால் எட்ட முடியும். காரின் அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 250 கி.மீட்டர் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பண்ட் ஓட்டியது Mercedes SUV சிபியு காராக இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது.

அதாவது முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட கார், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளது. பண்ட் ஓட்டிய கார் ரூர்கி பகுதியில் சாலையின் தடுப்பில் மோதியதும், தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்தில் சிக்கும் 5 கார்களில் ஒரு கார் தீப்பிடித்து எரிவது வாடிக்கை என்றே சொல்லப்படுகிறது.

பல வாகனங்கள் மோதிக்கொள்ளும் போது கார்கள் எரிவது இயல்பாக பார்க்கப்பட்டாலும், பண்ட்டின் கார் சாலை தடுப்பில் மோதிய உடனே தீ பிடித்திருக்கிறது. அதே சமயத்தில் கார் கண்ணாடியை உடைத்து தப்பிக்க அவருக்கு கால அவகாசம் கிடைத்துள்ளது. இது கார் விபத்தில் சிக்கியதிலிருந்து சற்று தாமதமாகவே தீ பரவியிருக்கிறது என்பதை காட்டுகிறது.

பொதுவாக விபத்தில் எரிபொருள் டேங்குகளில் கசிவால் தீ ஏற்படலாம். பலமாக மோதும் போது எரிபொருள் இணைப்புகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோக, எஞ்சின் ஆயில், பிரேக் ஆயில் விபத்தின்போது தீப்பொறி ஏற்படும்போதோ, சூடான உலோக பாகங்களுடன் தொடர்பு கொள்ளும்போதோ பற்றிக்கொள்ளலாம்.

காரின் மின்சார அமைப்பில் குறைபாடுகள், காரை வாங்கிய பின்னர் உரிமையாளர்கள் மின் இணைப்பு வயரிங்கில் செய்யும் மாற்றங்களும் விபத்தின் போது தீ விபத்தை ஏற்படுத்தலாம். துண்டிக்கப்பட்ட கேபிள்கள், பிளக்குகள் தீப்பொறியை தூண்டும் போது, அது உள் எரிபொருட்களையும் பற்றி எரியச்செய்ய வல்லது.

இது போக ஏர்பேக் வெடிக்கும்போதும் தீப்பொறி எழ வாய்ப்பு உள்ளது. ஜப்பானின் Takata நிறுவனம் தயாரித்த கார் ஏர்பேக்குகளால், கார் சிறிய விபத்தை சந்திப்போக்கும்போதே தீப்பற்றி எரிந்த சம்பவம் வரலாற்றில் உள்ளது. ஆனால், இவ்வாறு விபத்து நிகழ்வது என்பது மிகவும் அரிதான விஷயமே.

பெட்ரோல், டீசல் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் காரில் மேல்நோக்கி பரவுகிறது. மறுபுறம் மின் இணைப்பால் ஏற்படும் தீயாக இருந்தால், காரின் உட்பகுதியில் இருந்து வெளியே பரவுகிறது. மின் வயரிங் இணைப்பால் தீ விபத்து நேரிட்டால், உள்ளே இருப்பவர்கள் தப்பிக்க மிக, மிக குறுகிய கால அவகாசமே கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பண்ட் கார் விபத்து சம்பவத்தில் முதல்கட்ட தகவல் மற்றும் விபத்தில் நேரில் கண்டவர்கள் கூற்றுப்படி, வாகனம் மின்சார இணைப்பால் தீப்பற்றி எரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனவே, பண்ட் கார் விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்