போனி கபூர் மகனுடன் லிவின் உறவு.. லீக்கான 'அந்த' மாதிரி போட்டோக்கள் - தீயாய் பரவும் 49 வயது நடிகையின் புதிய வீடியோ

x

உயிரே திரைப்படத்தில், தைய தையா பாடலுக்கு நடனமாடி மனதை கொள்ளைக் கொண்ட நடிகை மலைகா அரோரா, தன்னை விட 12 வயது இளைய காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அதே பாடலுக்கு துள்ளல் நடனமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கானுக்கு தமிழில் பெரிய ஹிட் படமாக அமைந்தது உயிரே படம். இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடலும் சூப்பர் ஹிட். அதிலும் அக்கால 90ஸ் கிட்ஸ் முதல் இக்கால 2கே கிட்ஸ் வரை அனைவரும் ரசிக்கும் பாடல் தைய தையா பாடல் தான்.

இசை, வரிகள், நடனம் என அனைத்திலும் மக்களை கவர்ந்த பாடலில் நடனமாடி பலர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் மலைக்கா அரோரா. தற்போது 49 வயதிலும் யோகா சனம், உடற்பயிற்சி மூலம் இளமையாகவே தோற்றமளிக் கிறார்.

2017ல் முதல் கணவரை விவாகரத்து செய்த மலைக்கா அரோராவிற்கு 16 வயதில் மகன் உண்டு. நடிப்பு, மாடலிங் என வலம் வந்த மலைக்கா அரோரா போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை டேட் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்தியில் பல படங்களில் கதாநாயகனாக நடித்த அர்ஜுன் கபூருடன் தனது காதலை 2019ல் உறுதி செய்தார் மலைக்கா அரோரா.

ஜோடி பொருத்தம் நச் என்று இருந்தாலும் இந்த ஜோடி எப்போதும் விமர்சன வளையத்திற்குள்ளே தான் இருக்கும். ஏனென்றால் மலைக்கா அரோராவை விட அவரது காதலன் அர்ஜுன் கபூர் 12 வயது சிறியவர்.

பிரியங்க சோப்ரா, நிக் ஜோனஸை பின்னுக்கு தள்ளி விமர்சனத்தில் முந்தியுள்ளது இந்த ஜோடி. இதை விட அவ்வப்போது மலைக்கா அரோரா காதலனுடன் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வீண் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் காதலனின் 37வது பிறந்தநாள் பார்ட்டியில் மலைக்கா அரோரா தனது ஹிட் பாடலுக்கு நளினத்துடன் நடனமாட..அந்த வீடியோ காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

வயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறாமல் இருக்கும் மலைக்கா அரோராவின் துள்ளல் நடன வீடியோ மீண்டும் அவரது ரசிகர் பட்டாளத்தை தட்டி எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்