மொத்தம் 118..அத்தனைக்கும்.. இன்னும் ஒரு நாள் தான் டைம்..! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் - சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள்

x
  • கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை ஒரு நாளுக்குள் துண்டிக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • இது குறித்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
  • அப்போது, யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 44 செங்கற்சூளைகளில், 32 சூளைகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • ஆனால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் 118 செங்கல் சூளைகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
  • மின் இணைப்பை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது? கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்க கூடாது-ஆதரிக்க கூடாது என அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர்.
  • 118 சட்டவிரோத செங்கற்சூளைகளுக்கான மின் இணைப்பை ஒரு நாளில் துண்டித்து, மார்ச் 6 -ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மின்சார வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்