"புதினுடன் பேச தயார் ஆனால்..?" - அமெரிக்க அதிபர் பைடன் வைக்கும் செக் | USA | Joe Biden

x

ரஷ்ய அதிபர் புதினை உடனடியாக தொடர்பு கொள்ளும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோனுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் புதின் ஆர்வம் காட்டினால், நேட்டோ நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து அவருடன் பேசத் தயாராக இருப்பதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்