ஜடேஜா குடும்பத்திற்குள் அரசியல் சண்டை?குழப்பத்தில் ஜடேஜா - ஒருபக்கம் மனைவி..மறுப்பக்கம் தங்கை

x

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், வடக்கு ஜாம்நகர் தொகுதியின் பாஜக வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவில் ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவியும் இணைந்தனர். இந்நிலையில், ஜடேஜாவின் மனைவி போட்டியிடும் அதே தொகுதியில் அவரது சகோதரி நைனா ஜடேஜா காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்த பிறகு தான் அவரது சகோதரி நைனா ஜடேஜா காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்