புனேவை புரட்டிபோட்ட மழை...5 கி.மீ வரை வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

x

புனேயில் இடைவிடாது பெய்து வரும் மழையால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்

இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதால், புனே மாவட்டம் மிகவும் உஷார் நிலையில் உள்ளது, .

புனேவைச் சுற்றியுள்ள காட் பகுதிகளில் வசிப்பவர்கள் ஏற்கனவே கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர் .மேலும் அதன் தீவிரம் இன்று மிகக் கனமழையாக அதிகரிக்கும் என்று கணிப்புகளின்படி எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சவாலான காலநிலையில் வெளியில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

புனேவைத் தவிர, பால்கர், ராய்காட் மற்றும் சதாரா உள்ளிட்ட மகாராஷ்டிராவில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், புனேக்கான எச்சரிக்கை நிலை நாளை முதல் ஆரஞ்சு எச்சரிக்கையாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புனேயில் இடைவிடாது பெய்து வரும் மழையால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்