"சாவர்க்கர டஃச் பண்ணாதீங்க ராகுல்.. அப்புறம் கூட்டணி விரிசல் ஆகிடும்" - எச்சரித்த உத்தவ் தாக்கரே

x
  • சாவர்க்கரை அவமதிக்க வேண்டாமென, ராகுல் காந்திக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்...
  • எம்.பி. தகுதி நீக்க நடவடிக்கைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தன்னுடைய பெயர் சாவர்க்கர் அல்ல, காந்தி எனவும், காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
  • ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, சாவர்க்கர் தங்களின் தெய்வம் என்றார்.
  • சாவர்க்கரை அவமதிக்க வேண்டாமென கூறிய அவர், தொடர்ந்து விமர்சித்தால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எச்சரித்தார்.
  • இதனிடையே அதானி குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளை பாராட்டிய தாக்கரே, பிரதமர் மோடியை அவமதிப்பது இந்தியாவை அவமதிப்பதாக ஆகாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்