ராகுல் எம்பி பதவி பறிப்பு விவகாரம் - குஜராத் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை, குஜராத் உயர்நீதிமன்றம், வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

பிரதமர் மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாகக்கூறி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைத்தண்டனையை நீக்கக்கோரியும், தீர்ப்பை நிறுத்திவைக்க வலியுறுத்தியும் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்