ராகுல்காந்தியின் பல நாள் யாத்திரை.. பாதுகாப்பு இல்லாததால் பாதியில் நிறுத்தம் - பின்னணி என்ன..?

x

நாளை மறுநாள் நிறைவடையும் ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, பாதுகாப்பு குறைபாடு காரணமாக தனது நடைப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ள மல்லிகார்ஜூன கார்கே, ஒவ்வொரு நாளும் பாத யாத்திரையில் கணிக்க முடியாத அளவுக்கு ஏராளமானோர் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு பெறுவதால், அதில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பங்கேற்பார்கள் என்றும், அதனால் பாத யாத்திரையின் நிறைவு விழாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்