"வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000.." அடுத்த அதிரடி திட்டம்.. - ராகுல் காந்தி வாக்குறுதி

x
  • கர்நாடகாவில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்று, நான்காவது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
  • அதில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதந்தோறும் முறையே 3000 மற்றும் 1500 என இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகாவில் பாஜக நாற்பது சதவீத கமிஷன் அரசை நடத்தி வருவதாகவும் இது தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் அவர் செவி சாய்க்கவில்லை எனவும் இந்த ஆட்சியை தொடரவிடக் கூடாது என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்