வெடித்து சிதறிய புதின் திறந்த பாலம் உலகை மிரட்டிய ரஷ்யாவுக்கு பின்னடைவா? - பூதாகரமான உக்ரைன் போர்

x

வெடித்து சிதறிய புதின் திறந்த பாலம் உலகை மிரட்டிய ரஷ்யாவுக்கு பின்னடைவா? - பூதாகரமான உக்ரைன் போர்

இந்த பாலத்தை பாதுகாக்க டேங்கர்கள், போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள் எல்லாம் பணியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இப்போது இந்த பாலம் தான், அவ்வழியாக சென்ற டிரக் வெடித்ததும் தகர்ந்துள்ளது. சாலை பாலத்தில் ஒரு பகுதி கடலில் விழுந்துவிட்ட நிலையில், ரயில் பாலம் எரிந்து எலும்புக்கூடாக நிற்கிறது. உக்ரைனும், ரஷ்யாவும் டிரக் வெடித்து ஏற்பட்ட இந்த சம்பவம் விபத்து என்பதை மறுத்துவிட்டன.

மறுபுறம் உக்ரைன் தான் இந்த சதிதிட்டத்தை அரங்கேற்றியிருப்பதாக கிரிமியாவில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். உக்ரைன் படையெடுப்பால் உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்த ரஷ்யா, சமீபகாலமாக பல பகுதிகளில் இருந்து பின்வாங்கி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகளுக்கு பக்க பலமாக விளங்கிய பாலம் தகர்க்கப்பட்டுள்ளது அந்நாட்டு படைகளுக்கு கூடுதல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்