"இந்தியாவ பாருங்கயா..கத்துக்கோங்க" - புதின் சொன்ன விஷயம்.. உற்றுநோக்கும் உலகம் |

இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள், இந்தியா இன்னும் மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வெகுவாக பாராட்டியுள்ளார்.
x

மாஸ்கோவில் ரஷ்ய ஒற்றுமை தினம் நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் இந்தியாவை வெகுவாக பாராட்டினார். இந்தியாவை பாருங்கள் என அடையாளம் காட்டி பேசியவர், இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள், ஊக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள் என்றும் அவர்களல் இந்திய தேசம் வளர்ச்சியை பெற்று வருகிறது எனக் கூறினார். விரைவில் இந்தியா வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என கூறிய புதின், இந்தியாவின் 150 கோடி மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கான மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி உண்மையான தேசபக்தர் எனவும், பல சவால்களுக்கு மத்தியில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்ளையை அமல்படுத்தி வருபவர் எனவும் புதின் புகழ்ந்திருந்தார். அப்போது உலக விஷயங்களில் இந்திய பங்களிப்பு வருங்காலங்களில் அதிகரிக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்