பிரதமர் மோடி குறித்து புதின் சொன்ன விஷயம்

x

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளபோதும், அமெரிக்கா தயாராக இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய புதின், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருந்தபோதும், அமெரிக்காவிடம் இருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார். சீனாவுடன் ரஷ்யா மிக நெருக்கமான உறவில் உள்ளதாக தெரிவித்துள்ள புதின், சீனாவுடனான வர்த்தக உறவு மேலும் வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியை இந்தியாவின் சிறந்த தேசபக்தர் என பாராட்டிய புதின், மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பாராட்டி பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்