நபிகள் குறித்து பாஜகவினர் கருத்துக்கு கண்டனம் - பாஜகவினர் படங்களுக்கு தீவைப்பு

நபிகள் குறித்து பாஜகவினர் கருத்துக்கு கண்டனம் - பாஜகவினர் படங்களுக்கு தீவைப்பு
x

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர், பதாகையில் இருந்த பாஜகவினர் படங்களை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது. நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நூபூர் சர்மா மற்றும் பாஜக மூத்த தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே ஏராளமான இஸ்லாமியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன முழக்கம் எழுப்பிய இஸ்லாமியர், ஆர்ப்பாட்ட முடிவில், பதாகையில் இருந்த பாஜகவினரின் படங்களை தீயிட்டு கொளுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்