பாலியல் தொல்லை.. மாநிலம் மாநிலமாக தாவிய தனியார் பள்ளி தாளாளர் - கோவாவில் அமுக்கிய தமிழக போலீஸ்

x

திருநின்றவூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தேடப்பட்டு வந்த பள்ளி தாளாளர் கோவாவில் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநின்றவூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு, அப்பள்ளியின் தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார்.

இதனையடுத்து வினோத்தை தேடி வந்த தனிப்படை போலீசார், அவரை கோவாவில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் வினோத் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வினோத் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்