தனியார் நிதி நிறுவனத்தில் கடன்...| அவதூறாக பேசி மிரட்டிய ஊழியர்..!

x

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அனுக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ஊரில் டீக்கடை நடத்தி வரும் நிலையில், இதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இதற்கான தவணை தொகையையும் தொடர்ச்சியாக கட்டி வந்துள்ளனர். இந்த மாதத்திற்கான தவணை தொகையை வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர், ஜெயந்தியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் விரக்தியடைந்த அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்