PRIMETIMENEWS | நீட் வழக்கு - ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு - "ஏ குரூப் ரத்தம் - பக்கவாதம் வரும் அபாயம்"

x

பொதுக்குழு வழக்கு - காரசார விவாதம்

அதிமுக பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு எதிராக கூட்டப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு முறையீடு...

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் அவசியம் என ஈபிஎஸ் தரப்பு வாதம்...

விசாரணையை 1 வாரத்திற்குள் நிறைவு செய்ய நீதிபதிகள் விருப்பம்...


காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவு

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.....

முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்...

"ரூ.15,610 கோடி முதலீடு - ஒப்புதல்"

15 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...

8 ஆயிரத்து 776 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தகவல்...


"விலகுபவரை வாழ்த்தி வழியனுப்புவேன்"

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிரடி...

விலகுபவர்கள் யாரும் தம்மை புகழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை எனவும் பதிலடி...

நீட் வழக்கு - ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு

நீட் தேர்வு வழக்கை தக்க வழக்கறிஞர்களை நியமித்து திறம்பட நடத்தவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குற்றச்சாட்டு...

விலக்கு பெறுவதில், இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் காட்டம்...


Next Story

மேலும் செய்திகள்