அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் சந்திப்பு - தயாராகும் அமெரிக்கா!

x

ஜூன் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார்

வரும் 20 - ஆம் தேதி இந்தியாவில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் பிரதமர் மோடி ஜூன் 21- ஆம் தேதி ஐ.நா. தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை முன் நின்று தொடங்குகிறார். பிறகு 22 - ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச உள்ளார். அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி அதிபரின் மனைவி ஜில்பைடன் இணைந்து இரவு விருந்து வழங்குகின்றனர். அன்றைய தினம் யூ எஸ் காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஜூன் 23 ஆம் தேதி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளிக்கிறார். சுற்றுப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதி எகிப்திற்கு பிரதமர் மோடி பயணம் செல்கிறார். தலைநகரம் கெய்ரோ செல்லும் அவர் எகிப்து அதிபர் அப்துல் பத்தாவை நேரில் சந்திக்கிறார் . எகிப்து நாட்டின் இந்திய வம்சாவளியினர் முக்கிய நபர்கள் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்