"சதித்திட்டங்களை முறியடித்து புதிய பாதையில் முன்னேறிய குஜராத்" - பிரதமர் மோடி பெருமிதம்

x

"சதித்திட்டங்களை முறியடித்து புதிய பாதையில் முன்னேறிய குஜராத்" - பிரதமர் மோடி பெருமிதம்


நிலநடுக்கத்திற்கு பின்னர் குஜராத் மாநிலம் சதித்திட்டங்களை முறியடித்து புதிய பாதையில் முன்னேறியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது நேரிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை பறைசாற்றும் வகையில் புஜ் பகுதியில் ஸ்மிருதி வனத்தை மோடி திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, புஜ் நகரில் நிலநடுக்கப் பாதிப்புகளை நினைவு கூர்ந்தார். நிலநடுக்கம் நடந்த 2வது நாளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது, நான் முதலமைச்சராக இல்லை என்று கூறினார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு என்னால் உதவ முடியும் என்ற எண்ணம் மேலோங்கியதாகவும், எனினும் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருக்க முடிவு செய்ததாகவும் கூறினார். 2001ம் ஆண்டு நிலநடுக்கத்திலிருந்து புஜ் பகுதி மீண்டு வராது என்று பலரும் கூறியதாகவும், ஆனால், மக்கள் அதனை மாற்றிக் காட்டியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். முதலீடுகளுக்கான புதிய பாதைகளை உருவாக்கி தற்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்