ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கு செல்போன் டவரில் ஏறி அதிர்ச்சி கொடுத்த மக்கள்! | Ponneri

x

பொன்னேரி அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு 10 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சயனாவரம் கிராமத்தில் காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், 45 வீடுகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொன்னேரி - செங்குன்றம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின்கட்டண அட்டை என ஆவணங்களை சாலையில் வீசி, அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும், செல்போன் டவரில் ஏறி இருவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். இறுதியாக அனைத்து வீடுகளையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்