ஆணவக்கொலை என குமுறும் பெற்றோர்...கஞ்சா மோதல் என ஆதாரம் கொடுக்கும் போலீஸ்...

x

முத்தையா... இரண்டு நாட்களாக திருநெல்வேவில் மாவாட்டத்தையே இவரது கொலை அதிரவைத்து கொண்டிருக்கிறது. 19 வயதான முத்தையா திருவெல்வேலி மாவட்டத்தில் உள்ள அப்புவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். திருமண அழைப்பிதல் அச்சகத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். சென்ற ஞாயிற்று கிழமை இரவு நண்பர்களை பார்க்க சென்ற முத்தையா கத்தி குத்து காயங்களோடு சடலமாக கிடந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். முத்தையா பக்கத்து ஊரை சேர்ந்த பள்ளி தோழியை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலை பெண் வீட்டார் எதிர்த்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த எதிர்ப்பையை எல்லாம் மீறி முத்தையா காதலித்து வந்திருக்கிறார். அடிக்கடி முத்தையாவின் வீட்டுக்கு காதலி வந்து செல்வது வழக்கம். சம்பவம் நடந்த அன்று காலை முத்தையா காதலியை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். மாலை காதலியை அவரது ஊரில் விட்டு விட்டு வந்த பிறகு தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.ஜாதியை காரணம் காட்டி பெண் வீட்டார் முத்தையாவை கொலை செய்திருக்கிறார்கள் என்று அவரது குடும்பத்தினர் அடித்து கூறியிருக்கிறார்கள். ஆனால் முத்தையா காதல் விவகாரத்தில் கொலை செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. சம்பவம் நடந்த அன்று முத்தையாவோடு இருந்த அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரித்திருக்கிறார்கள். அவர் அளித்த தகவல் இந்த வழக்கின் போக்கை தலைகீழாக மாற்றியிருக்கிறது. அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய தங்கையை முத்தையா கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷூக்கு முத்தையா மீது கொலை வெறி உண்டாகியிருக்கிறது. கொலை நடந்த அன்று முத்தையாவை சுரேஷூம் அவரது ஆட்களும் தேடியிருக்கிறார்கள். காட்டுப்பகுதியில் அவர் கிடைத்ததும் கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பி சென்றிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சுரேஷூம் போலீசார் கூறிய அதே காரணத்தை தான் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார்..ஆனால் அந்த காரணத்தை முத்தையாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதாக இல்லை. நடந்திருப்பது நிச்சயம் ஆணவ கொலை தான் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போலீசார் திட்டமிட்டே உண்மை காரணத்தை மறைப்பதாக போராட்டகாரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நபர்கள் அப்பாவிகள் என்றும் உண்மையான குற்றாவாளிகளை காவல்துறை காப்பாற்றுகிறது என்பது அவர்களுடைய வாதம். கொலை நடந்த இடத்திற்கு முத்தையாவை தேடிச் சென்ற போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவ்வழியாக சென்றதாகவும், அவர்கள் தான் குற்றவாளியாக இருக்க வேண்டுமெனவும் சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.போலீசாரும், முத்தையாவின் குடும்பத்தினரும் ஒருவர் சொல்வதை மற்றொருவர் ஏற்க மறுகின்றனர். தீவிர விசாரணைக்கு பிறகே இந்த வழக்கில் ஒரு முடிவு எப்பட்டப்படும் என்று தெரிகிறது. அதுவரை முத்தையாவின் மரணத்தில் உள்ள மர்மம் அவிழ்கப்படாமலே இருக்கும்.


Next Story

மேலும் செய்திகள்