"என் தம்பிய விட்ருங்க சார்" - சகோதரை விடுவிக்க கோரி போலீசாரின் கால்களை பிடித்து கதறி அழுத சகோதரிகள்

x

"என் தம்பிய விட்ருங்க சார்" - சகோதரை விடுவிக்க கோரி போலீசாரின் கால்களை பிடித்து கதறி அழுத சகோதரிகள்


சேலத்தில் போலீசாரின் கால்களை பிடித்துக் கொண்டு சகோதரிகள் இருவர் கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து, கனகராஜை கருப்பூர் போலீசார் விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறி, அவரது சகோதரிகள் இருவர் போலீசாரின் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். பின்னர், போலீசார் அவர்களை மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்