"விஷமாகும் நொய்யல், பாழாகும் நிலம்" - பல அடி உயரத்திற்கு பொங்கும் நுரை - அச்சத்தில் பொதுமக்கள்...!

x

கோவை மாவட்டம் நஞ்ண்டாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரைகள் உருவாகி உள்ளது.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் பொங்கும் நுரையானது, காற்றில் பறந்து பொதுமக்களுக்கும் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.





Next Story

மேலும் செய்திகள்