G 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

x

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்.

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து மாநாட்டில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி7 உச்சி மாநாட்டையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்