திடீரென போன் போட்ட பிரதமர் மோடி - ரிஷி சுனக்கிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

x

இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக்கிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமது டிவிட்டர் பதிவில், இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடியின் பதிவுக்கு, இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக் பதில் அளித்துள்ளார்.

அவர் தமது பதிவில், புதிய பொறுப்பில் பயணத்தை தொடங்கும் போது பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும், அடுத்த வர உள்ள மாதங்களில் அல்லது ஆண்டுகளில், இரு பெரிய ஜனநாயகநாடுகளான இங்கிலாந்தும் இந்தியாவும் எதை இலக்காக அடையலாம் என எதிர்ப்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்