தாய்ப்பாலில் இருந்த பிளாஸ்டிக் துகள்கள்; அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள் - உடலுக்குள்ளும் நுழையுமா பிளாஸ்டிக்?

x

தாய்ப்பாலில் பிளாஸ்டிக் துகல்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் மிக தூய்மையானது எது..? என்றால் அது தாய்ப்பால்தான் என கூறுவதை மறந்துவிட வேண்டியதுதான் என்பது போன்ற ஆராய்ச்சி முடிவு வெளியாகியுள்ளது.

இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்பட்டது ஆராய்ச்சியாளர்களை மட்டுமல்ல செய்தியை படிப்பவர்களையும், கேட்பவர்களை யும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ரோமில் குழந்தை பெற்றெடுத்து ஒரு வாரம் ஆன 34 தாய்மார் களிடம் தாய்ப்பால் பெற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் 75 சதவீத பாலில் மைக்ரோபிளாஸ் டிக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக்கில் பெரும்பாலும் தாலேட்டுகள் (phthalates) போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது குழந்தைகளின் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என கவலையை தெரிவித்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள், இதுதொடர்பான விரிவான ஆய்வு அவசியம் என பரிந்துரைக்கிறார்கள்.

பிளாஸ்டிக் பேக்கிங் உணவுகள், கடல் உணவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வாளர்கள், சுற்றுசூழலில் எங்கும் நிறைந் திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் ஆபத்தை தவிர்க்க முடியாத தாக ஆக்குகிறது என்கிறார்கள். ஏற்கனவே நஞ்சுக்கொடியில் மைக்ரோபிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

மனிதன் வீசியெறியும் பிளாஸ்டிக் ஒவ்வொன்றும் உணவு, காற்று மற்றும் நீர் வழியாக அவனுக்கே திரும்புவது பல ஆய்வுகளில் வெளியாகியுள்ளது. மனித குலத்தின் பொறுப்பற்ற செயலுக்கு ஏதும் அறியாத பூமியில் ஜனனிக்கும் ஒரு சிசுவும் விலைகொடுக்க தொடங்கியிருக்கிறது என்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயமாகும்


Next Story

மேலும் செய்திகள்