யானைகளுக்கு உடல் பரிசோதனை .. சாதுவாக நின்ற 'ஆஸ்கர்' புகழ் ரகு - அடம்பிடித்த சங்கர் யானை

x

முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு உடல் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆஸ்கர் புகழ் ரகு யானை, இரண்டு பாகன்களை கொன்ற மசினி யானை, ஏழு பேரை கொன்ற சங்கர் யானைக்கு உடல் பரிசோதனைக்காக எடை போடப்பட்டது. அப்போது ரகு மற்றும் மசினி யானைகள் சாதுவாக எடை போட ஒத்துழைத்த நிலையில், சங்கர் யானை எடை மேடையில் ஏற மறுத்து அடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து வாழைத் தார், கரும்பு வழங்கி வனத்துறையினர் சமாதானம் செய்த நிலையில், எடை போட ஒத்துழைத்தது.


Next Story

மேலும் செய்திகள்