வேஷம் கட்டி கலக்கும் செல்லப்பிராணிகள்...

x

உலக அழகி போட்டில ஆரம்பிச்சு.... மிஸ் தென்காசி அழகி போட்டி வரை... நம்ம ஊர் பெண்கள் கலந்துக்காத அழகி போட்டிகள் கிடையாதுனே சொல்லாம்.... ஆனா இப்போ அவங்களுக்கே டஃப் குடுக்குற மாதிரி இந்த நாய்குட்டிகளும் மேக்கப்லாம் போட்டு... அழகி போட்டிக்கு கூட்டம் கூட்டமா கிளம்பிருக்குங்க..

கலிபோர்னியாவுல நடந்த ஒரு முக்கியமான ஃபெஸ்டிவல் தான் the annual Puppy Prom...

இந்த பெஸ்டிவல்லோட ஸ்பெஷல் என்னனா வீட்டுல வளக்குற நாய் மாதிரியான செல்லப்பிராணிகளுக்கு... மேக்கப் பண்ணி, புது புது டிரஸ்லாம் போட வச்சு... பேஷன் ஷோவ் நடத்தி அலப்பறை குடுக்குறாங்க...

இது மட்டுமில்லாம வேசம் கட்டி வர நாய்களுக்கு... சிறந்த அழகி பட்டம்.. அழகன் பட்டம்லாம் குடுத்து கவுரவிக்க வேற செய்யுறாங்க...

அதுனால இந்த வருஷம் பட்டத்தை தட்டி தூக்க... எல்லா நாய்களும்... மொத பரிசு எனக்கு தான்னு... அழகி போட்டிக்கு கிளம்ப ஆரம்பிச்சுடுச்சுங்க...

இதுல இன்னோரு சுவாரஸ்யம் என்னனா... போனம் வருசம் வரை... வெறும் நாய்கள் மட்டும் கலந்துகிட்ட இந்த போட்டில... இந்த வருஷம் நாங்களும் வரலாமானு பூணைகளும் மேக்கப்லாம் போட்டு மாஸ் காட்டிருக்குங்க.


Next Story

மேலும் செய்திகள்