மதுரை மக்களே மெட்ரோ ரூட் பார்க்க ரெடியா..? - வந்தாச்சு புது ரிப்போர்ட்

x

மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான இடங்களை மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். பூமிக்கு அடியில் மெட்ரோ ரில் செல்லக்கூடிய வடக்கு மாசி வீதி, வடக்கு ஆவணி மூல வதி, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், ஜூலை 15ஆம் தேதி விரிவான திட்ட‌ அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதில் 5 கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். பூமிக்கு அடியில் 3 ரயில் நிலையங்கள் உட்பட 27 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்