வேகத்துடன் தடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர்.. ஆபத்தை உணராமல் அணையைக் கடக்கும் மக்கள்.!!

x

வேகத்துடன் தடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர்.. ஆபத்தை உணராமல் அணையைக் கடக்கும் மக்கள்.!!


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பெரும்பள்ளம் என்ற இடத்தில், தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து செல்கிறார்கள். அந்த வழியாக சிறுவர்களையும், முதியவர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். தமிழக, ஆந்திர எல்லையில் ஆந்திர அரசு கட்டியுள்ள அந்த அணையில் இருந்துதான் தமிழகத்தின் பாலாற்றுக்கு தண்ணீர் வருகிறது. வெள்ளம் குறையும் வரை, தடுப்பணையைக் கடப்பதற்குத் தடை செய்து, பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்த தமிழக, ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்