விமானத்தின் டயர் வெடித்து விபத்து..குலுங்கியதால் கீழே விழுந்த பயணிகள் - அதிர்ச்சி சம்பவம்

x

ஹாங்காங் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 11 பயணிகள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு Cathay Pacific நிறுவன விமானம் புறப்பட்ட நிலையில், ஓடுபாதையில் சென்ற போது திடீரென விமானத்தின் டயர் வெடித்தது. விமானம் குலுங்கிய நிலையில், பயணிகள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து 11 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழிறக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியது.


Next Story

மேலும் செய்திகள்