"குழந்தையை மற்ற குழந்தைகளுடன் பெற்றோர் ஒப்பிடாதீர்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

x

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியின் 38 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, 2 வெள்ளை நிற புறாக்களை வானில் பறக்கவிட்டார். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம், கராத்தே ஆகிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த அமைச்சர், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்