"உணவுக்கு கூட வழியில்லை..?" - பட்டினியின் பிடியில் ராணுவ வீரர்கள் - கண்ணீர் வடிக்கும் பாகிஸ்தான்

x
  • கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவு குறைக்கப்பட்டுள்ளது.
  • 63 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் கடன் சுமையில் தடுமாறும் பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு 31.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் ராணுவ வீரர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  • உணவு விலை ஏற்றத்தினால், ராணுவ கிடங்குகளில் உணவு பொருட்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் கமாண்டர்கள் சிலர், ராணுவ தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்
  • நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தானின் ராணுவ செலவுகளுக்கு ஒன்ரை லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மொத்த செலவுகளில் ராணுவத்திற்கு 17.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் 11 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
  • ஆனால் கடும் விலைவாசி உயர்வினால், இந்த தொகை போதாமல், உணவு பொருட்கள் வாங்க, ராணுவ கமான்டர்கள் கூடுதல் நிதி கோரியுள்ளனர்.
  • தேவையான நிதி ஒதுக்கும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர், பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்