"இரட்டை இலை எங்கள் வசம்.. கட்சியும் எங்கள் வசமே" - ஓபிஎஸ் அணி மகிழ்ச்சி

x

"இரட்டை இலை எங்கள் வசம்.. கட்சியும் எங்கள் வசமே" - ஓபிஎஸ் அணி மகிழ்ச்சி


சேலத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், எம்ஜிஆர் தொடங்கி நடத்திய கட்சியை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வளர்த்தெடுத்த கட்சியை, நீதிமன்றத்தின் மூலமாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றிருக்கிறார் என்று நிர்வாகிகள் கூறினர். இக்கூட்டத்தில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே இரட்டை இலை சின்னம், தங்களுக்கு சொந்தமாகிவிட்ட நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கட்சியும் தங்கள் வசம் வந்து விட்டது என்று கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்