பாட்னாவில் கூடும் எதிர்க்கட்சிகள்.. தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை

x

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டு வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஜூன் 12-ஆம் தேதி பாட்னாவில் கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் பிகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12-ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே 19 எதிர்க்கட்சித் தலைவர்கள், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், பல மாநில சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்