திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்... மெக்கானிக் செய்த துரித செயல்

x

திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்... மெக்கானிக் செய்த துரித செயல்


திண்டுக்கல் மாவட்டத்தில் சாலையில் ஆம்னி வேன் திடீரென்று தீப்பிடித்த நிலையில், மெக்கானிக் ஒருவர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


எரியோட்டைச் சேர்ந்த தினேஷ், ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு பங்கில் கியாஸ் நிரப்பி விட்டு, சாலையூர் நால்ரோடு அருகே பெட்ரோலில் இருந்து கியாசுக்கு மாற்றிய போது ஆம்னி வேன் பேட்டரியில் திடீரென்று தீ பற்றியது.

இதைக் கண்ட அருகில் இருந்த மெக்கானிக் மூர்த்தி வாட்டர் வாஷ் செய்யும் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை அணைத்தார்.

இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆம்னி வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்