ஆபாசம்.. அசிங்கம்.. Boys லாக்கர் ரூம்.. மோக வெறியால் சிக்கிய பிரபல பாடகர்.. இந்த P*rn வீடியோ பார்த்தால் அடுத்து நீங்க தான்..!

x

இன்ஸ்டாகிராம் சிறார் பாலியல் உள்ளடக்கங்களை ஊக்குவிப்பதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

இன்ஸ்டாகிராம்... எப்போதும் புதியவற்றை விரும்பும் இளசுகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைதளம்... அவ்வப்போது சிக்கலில் சிக்கும் தளமும் கூட..

2020 Boys Locker Room என்ற இன்ஸ்டாகிராம் குழுவை தொடங்கிய இளைஞர்கள், சிறுமிகள் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்களை பாலியல் வல்லுறவு செய்வது குறித்து வக்கரத்தை பகிர்ந்ததாக வெளியான தகவல் திடுக்கிடச் செய்தது.

அப்போதே இன்ஸ்டாகிராம் சிறார் பாலியல் சிக்கலுக்கு இடமளிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.

இப்போது அரியானாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போஜ்பூரி பாடகர் அபிஷேக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை தொடர்ந்து போலீசில் சிக்கியிருக்கிறார்.

இப்போது இன்ஸ்டாகிராமில் ஆபத்தான உள்ளடக்கங்களை கண்காணிப்பது யார்...? என்ற கேள்வி எழுகிறது.

இந்த சூழலில் சிறார் ஆபாச உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் ஊக்குவிப்பதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை இணைந்து இன்ஸ்டாகிராம் செயல்பாட்டை ஆய்வு செய்திருக்கிறது.

ஆந்த ஆய்வு முடிவில் இன்ஸ்டாகிராம் சிறார்கள் இடம்பெற்றிருக்கும் பாலியல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார் பாலியல் நெட்வொர்க் கும்பல்கள், பாலியல் உள்ளடக்க வீடியோவை ஊக்குவிக்கவும், அவைகளை விற்கவும் இன்ஸ்டாகிராம் இடமளிக்கிறது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்களின் கணக்கு என அடையாளம் காட்டும் வகையில் கணக்குகளை தொடங்கி, ஆபாசங்களுக்கு விதைப்போடப்படுவதாகவும், இந்த பதிவுகளை விரும்புவோருக்கு சென்றடையும் வகையில் இன்ஸ்டாகிராம் அல்-கொரிதம் இருப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆபாசத்தை கட்டுப்படுத்துவதில் இன்ஸ்டாகிராம் தோல்வியடைந்ததுள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா விசாரிக்க, விசாரணை குழுவை அமைத்திருக்கிறது.

இத்தகைய சூழலில் சமூக வலைதளங்களுக்கு கடிவாளமிடுவது யார்...? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்...


Next Story

மேலும் செய்திகள்