"சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அறவே கிடையாது" - அமைச்சர் கீதாஜீவன் உறுதி

x

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலம் முழுவதும் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால், சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் தமிழக அரசுக்கு அறவே கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பள்ளி, சத்துணவு மையங்களின் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் எந்தவித நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கீதா ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

சத்துணவுத் திட்டத்தை மேலும் வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதில் யாருக்கும் எந்தவொரு ஐயமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்