"Nonstick பாத்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" - தமிழக‌ அரசுக்கு காங். எம்எல்ஏ கோரிக்கை

x

Nonstick பாத்திரங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாத‌த்தில் பேசிய அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன், Nonstick பாத்திரங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து பேசினார். Nonstick பாத்திரங்களில் டெஃப்லான் கோட்டிங்கில் உள்ள பாலிமர் 260 டிகிரி செல்ஷியஸ் வரை நிலையாக இருக்கும் என்றும், அதன்பின்னர் டெஃப்லான் கோட்டிங் சிதைய ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குறைந்த வெப்பத்தில் மின்சார அடுப்பில் இந்த Nonstick பாத்திரங்கள் பயன்படுத்துவதாக கூறினார். ஆனால், நாம் பயன்படுத்தும் கேஸ் அடுப்பில் தீயின் வெப்பம், எண்ணெய் பயன்பாடு போன்றவற்றால் டெஃப்லான் சிதைந்து விஷமாக உணவில் கலப்பதாகவும், தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாவும் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதனால், Nonstick பாத்திரங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்