இன்றைய தலைப்பு செய்திகள் (14-07-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது...சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு...மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் அதிரடி...

'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட் மூலம் இன்று விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலம்...புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்...நிலவிற்கான பயணத்தை தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்...

ஒவ்வொரு இந்தியரின் கனவும், லட்சியமும் உயரமாக பறக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம்..சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவதாகவும் இன்று புகழாரம்..விண்வெளி துறையில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிரூபணம் ஆகியிருப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து...

பொது சிவில் சட்டம், ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடிவு..முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் தீர்மானம்...

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது, பிரதமர் மோடிக்கு இன்று வழங்கி கவுரவிப்பு...பிரான்ஸ் தேசிய தின நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு...

கனமழையால் டெல்லி யமுனை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி...காந்தி நினைவிடம், டெல்லி சட்டமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்தது...



Next Story

மேலும் செய்திகள்