இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (04-09-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பல்லடம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது...முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு...முக்கிய நபரான வெங்கடேசன் உள்ளிட்ட 2 பேரை பிடிக்க, 5 தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை...

பல்லடம் சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிப்பு...தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம்...

செப்டம்பர் 16ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்...நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக இன்று அறிவிப்பு...

பாஜகவை வீழ்த்தி இந்தியாவை மீட்டெடுப்போம்..Speaking for India வலையொலி தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேச்சு...

குஜராத் மாடல் என பொய் சொல்லி பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும் விமர்சனம்...

"இனப்படுகொலை வார்த்தையை பயன்படுத்தவில்லை"

சனாதனம் பற்றி தான் பேசியதில் தவறு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் திட்டவட்டம்...

இனப்படுகொலை என்ற வார்த்தையை தான் எங்கும் பயன்படுத்தவில்லை எனவும் விளக்கம்...

இந்தியா கூட்டணியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை...

தமிழக தேர்தல் ஆணையம் இன்று தகவல்...

ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்