இன்றைய தலைப்பு செய்திகள் (05-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒடிசாவில் விபத்து நடந்த வழித்தடத்தில் இன்று முதல் மீண்டும் ரயில்கள் இயக்கம்...சென்னை சென்ட்ரலில் இருந்து கோரமண்டல் விரைவு ரயில் மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது...இதுவரை 151 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஒடிசா அரசு தகவல்...

ரயில் விபத்தில் சிக்கிய 8 தமிழர்ககளில் 2 பேர் நலமாக உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தகவல்...6 பேரின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் பேட்டி...

வெயில் சுட்டெரிப்பதால், பள்ளிகள் திறப்பை மீண்டும் தள்ளி வைக்க, தமிழக அரசு இன்று முடிவு...ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...6 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் தொடங்கும் எனவும் அறிவிப்பு...

பு​திய தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும்...உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பரபரப்பு பேச்சு....தமிழகத்தில் கல்வி முறையை காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும் எனவும் கருத்து...

ஏழு நாட்களாக போக்கு காட்டிவந்த அரிக்கொம்பன் யானையை, மயக்க ஊசி செலுத்தி, இன்று போராடிப் பிடித்தது வனத்துறை...கோதையாறு வனப்பகுதியில் விட திட்டம்...

வரும் 12ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு...காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்க ஏதுவாக ஒத்தி வைக்கப்படுவதாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்