உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நெய்மர் திடீர் விலகல் | Neymar | FIFA Football Worldcup 2022

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரின் எஞ்சிய முதல் சுற்றுப் போட்டிகளில் நெய்மர் ஆடமாட்டார் என பிரேசில் அணி தெரிவித்து உள்ளது. செர்பியாவுக்கு எதிரான போட்டியின்போது கணுக்கால் பகுதியில் நெய்மர் காயம் அடைந்து பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில், காயத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த 2 போட்டிகளில் நெய்மரால் பங்கேற்க இயலாது என பிரேசில் அணியின் மருத்துவர் கூறி உள்ளார். இதேபோல் மற்றொரு வீரரான டேனிலோவும் முதல் சுற்றுப் போட்டிகளில் விளையாட மாட்டார் என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்