மே.தீவுகள்-நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் - நியூசி. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

x

மே.தீவுகள்-நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் - நியூசி. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


பார்படாஸில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், 50 ஓவர்களில் 301 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் சதம் விளாசினார். பின்னர் ஆடிய நியூசிலாந்தில் கப்தில், கான்வே, லாதம், மிட்செல் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். ஆல்ரவுன்டர் நீஷம் அதிரடியாக 4 சிக்சர்களைப் பறக்கவிட்டு 11 பந்தில் 34 ரன்கள் அடித்தார். இதனால், 48வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது.


Next Story

மேலும் செய்திகள்