"அன்று நாளைய தீர்ப்பு..நாளை எழுதப்போகும் தீர்ப்பு"..8 கோடி தமிழ் நெஞ்சங்களின் சொந்தம்

x

நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னை நேசிப்போரது பேரன்பில் தளபதி என்ற அடைமொழியுடன் உச்சநட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் விஜய்..

இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் - பின்னணி பாடகி சோபாவின் மகனான விஜய்க்கு, கல்லூரி படிக்கும் போதே நடிப்பு ஆர்வம் எட்டிப்பார்க்க, அண்ணாமலை படத்தில் ரஜினி கூறிய வசனத்தை தந்தையிடம் கூறி அவர் மூலமே சினிமாவில் என்ட்ரீ கொடுத்தார்

தந்தை தயவால் சினிமாவிற்கு வந்தது தொடங்கி மனதை நொறுக்கும் எதிர்மறை விமர்சனங்களால் நிறைந்திருந்தது விஜயின் ஆரம்ப கால வாழ்க்கை..

விக்ரமனின் பூவே உனக்காக விஜயின் திரைப்பயணத்தில் உயிர் கொடுக்க, அவ்வளவுதான் காதலுக்கு மரியாதை, லவ் டுடே என இளசுகளை ஈர்க்கும் காந்தமானார்

நட்சத்திரமாக உருவெடுக்கும் ஆசையுடன் ஆக்‌ஷன் கதைகளத்தில் குதித்த விஜய், அதிலும் வெற்றிக்கொடி நாட்டி கமர்ஷியல் ஹீரோவானார்.

பாட்டு, டான்ஸ், FIGHT, காமெடி, செண்டிமென்ட், பஞ்ச் டைலாக் என எல்லாவற்றிலும் தூள் கிளப்ப, விஜயை விரும்புவோர் கூட்டம் படத்துக்கு படம் அதிகரித்தது...

கில்லி, போக்கிரி மூலம் வசூல் நாயகனாக அவதரித்தவர், துப்பாக்கி படத்தின் மூலம் வசூல் சக்கரவர்த்தியானார்

ஒருபக்கம் ரசிகர்களின் ஏகோபத்திய ஆதரவால் சினிமாவில் உச்ச இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் அரசியல் சர்ச்சையிலும் சிக்கியது விஜய் பெயர்...

தலைவா TIME TO LEAD, அதிமுகவிற்கு ஆதரவு, சினிமாவில் அரசியல் வசனங்கள் என சர்ச்சை நீண்டு கொண்டே இருந்தது.

ஆனால் மக்கள் இயக்கம் மூலம் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம், கல்வி விருது விழா என சமீபத்திய நடவடிக்கைகள் விஜய் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் என கூற வைத்துள்ளது.

படத்திற்கு தடை, எதிர்ப்பு, சர்ச்சை என சிக்கல் பல எழுந்தாலும், விஜய்யின் வளர்ச்சியை பாதிக்கவில்லை. குறிப்பாக பீஸ்ட் எதிர்மறை விமர்சனங்கள் பெற்றாலும், எதிர்பார்த்த வசூலை குவித்தது என்பதே விஜயின் வெற்றிக்கான சான்று என்கிறார்கள் விமர்சகர்கள்..

வழக்கமாக விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பை கொடுக்க, லோகேஷுடன் இணைந்து கொடுக்கும் லியோ படம் வானளவு எதிர்பார்ப்பை கொடுத்துவிட்டது.

அண்ணன் நா இறங்கி வரவா என்ற வரியுடன் அரசியலில் கால் பதிக்க தயாராகும் விஜய் பிறந்த தினம் 22 ஜூன் 1974....


Next Story

மேலும் செய்திகள்