நாக்பூர் - பிலாஸ்பூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைத்த பிரதமர் மோடி

x

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 6வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதிவேகத்தில் செல்லக்கூடிய வந்தேபாரத் ரயிலின் முதல் சேவை டெல்லி மற்றும் வாரணாசி இடையே தொடங்கப்பட்டது.

தொடர்ந்து 5 இடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வரும் நிலையில், ஆறாவதாக நாக்பூரில் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, ரயில்வே பணிகள் முடிந்ததும், நாக்பூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா ஆளுநர் பக்த் சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்